TNPSC Group 4 Exam 2026 : வெற்றி பெறுவது எப்படி? – முழு வழிகாட்டி!
TNPSC Group 4 Exam 2026 : அறிமுகம்
TNPSC நடத்தும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மிக முக்கியமான தேர்வு TNPSC குரூப் 4. இத்தேர்வு பாடத்திட்டத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. முறையே தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு (அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டால் பொது ஆங்கிலம்), பொது அறிவு மற்றும் திறனறிவு மற்றும் மனத்திறன் தேர்வு. TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முறையே தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை முழுமையாக உள்வாங்குதல், முறையான திட்டமிடல், மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மற்றும் திருப்புதல் ஆகியவற்றுடன் ஒரு தெளிவான தயாரிப்புத் திட்டம் அவசியம். இம்மாதிரியான திட்டமிடல் இல்லாமல் இத்தேர்வை வெல்வது கடினம். இந்தப் பதிவில், குரூப் 4 தேர்வுக்குப் படிக்கும் முறை, பாடத்திட்டம் மற்றும் வெற்றிக்கான ரகசியங்களை விரிவாகக் காண்போம்.
TNPSC Group 4 Exam 2026 தாரகமந்திரம் சமச்சீர் புத்தகங்கள்
TNPSC குரூப் 4 2026 – தேர்வு முறை
| அம்சங்கள் | விவரங்கள் |
| தேர்வு மொழி | தமிழ் மற்றும் ஆங்கிலம் (தமிழில் மட்டுமே உள்ள பொதுத் தமிழ் தாளைத் தவிர) |
| மொத்த மதிப்பெண்கள் | 300 |
| தேர்வு நேரம் | 3 மணி நேரம் |
| கேள்விகளின் வகை | MCQs |
| கேள்விகளின் எண்ணிக்கை | 200 (200 x 1.5) = 300 மதிப்பெண்கள் |
| தேர்வு பாடத்திட்டம் | பொதுத் தமிழ்/ஆங்கிலம் பொது அறிவு, திறனறிவு மற்றும் மனத்திறன், |
| வயது வரம்பு | 18 முதல் 32 வயது வரை (ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) |
| கல்வித் தகுதி | குறைந்தபட்சம் SSLC அல்லது அதற்கு இணையான தகுதி |
| விண்ணப்பிக்கும் முறை | இணையவழி https://www.tnpsc.gov.in/ |
TNPSC Group 4 Exam 2026 : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தேர்வுக்குத் தயாராவதற்கு முன், Group 4 2026 தேர்வுக்கான கட்டமைப்பைப் புரிந்துகொள்வது அவசியமாகும். குரூப் 4 தேர்வு ஒரே ஒரு எழுத்துத் தேர்வைக் கொண்டது. இதில் Interview கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் பங்கீடு (Marks Distribution)
- பொதுத் தமிழ்: 100 வினாக்கள் (100 x 1.5 = 150 மதிப்பெண்கள்)
- பொது அறிவு (GS): 75 வினாக்கள் (75 x 1.5 = 112.5 மதிப்பெண்கள்)
- திறனறிவு (Aptitude): 25 வினாக்கள் (25 x 1.5 = 37.5 மதிப்பெண்கள்)
| பகுதி | பாடங்கள் | வினாக்கள் | மதிப்பெண் |
| பகுதி A | பொதுத் தமிழ் (தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு) | 100 | 150 |
| பகுதி B | பொது அறிவு (General Studies) | 75 | 112.5 |
| பகுதி B | திறனறிவு (Aptitude & Mental Ability) | 25 | 37.5 |
| 100 வினாக்கள் | 300 மதிப்பெண்கள் |
Study Plan for TNPSC Group 4 2026
பாடத்திட்ட வாரியான முக்கியத்துவம் (Syllabus Strategy)
1. பொதுத் தமிழ் (100 வினாக்கள்) – மிக முக்கியம்! இதுதான் உங்கள் வெற்றியின் தீர்மானிக்கும் காரணி. 100-க்கு 95+ எடுப்பது அவசியம்.
- Primary Source: 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வித் தமிழ் புத்தகங்கள்.
- பிரிவுகள்: இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்.
- குறிப்பு:
- பழைய புத்தகங்களில் உள்ள முக்கியத் தகவல்களையும் ஒருமுறை பார்த்துக் கொள்வது நல்லது.
2. திறனறிவு – Aptitude (25 வினாக்கள்) – சரியான பயிற்சியின் மூலம் இதில் 25-க்கு 25 எடுக்க முடியும்.
- முக்கியத் தலைப்புகள்: மீ.சி.ம (LCM) & மீ.பொ.வ (HCF), தனிவட்டி & கூட்டுவட்டி, விகிதம், லாப நட்டம், காலம் & வேலை.
- பயிற்சி: தினமும் 1 மணிநேரம் முந்தைய ஆண்டு வினாக்களைத் தீர்க்கவும்.
3. பொது அறிவு – General Studies (75 வினாக்கள்) – இதில் சில பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:
- Unit 8 & 9: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிர்வாகம் (அதிக வினாக்கள் இங்கிருந்து வரும்).
- இந்திய அரசியல் (Polity): அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள், சட்டத்திருத்தங்கள்.
- வரலாறு (History): சிந்து சமவெளி நாகரிகம் முதல் இந்திய தேசிய இயக்கம் வரை.
- அறிவியல் & புவியியல்: 6 முதல் 10 வரை உள்ள அடிப்படை அறிவியல் கருத்துக்கள்.
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs): கடந்த 6-8 மாத முக்கியச் செய்திகள் (தினமணி அல்லது தி இந்து தமிழ் திசை நாளிதழ்).
TNPSC Group 4 2026 : படிக்கும் முறை (TNPSC Group 4 2026: Step-by-Step Guide)
- சமச்சீர் புத்தகங்கள்:
- TNPSC தேர்வுக்கு 90% வினாக்கள் அரசுப் பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுகின்றது என்பதால் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை வரி வரிவாகப் படிக்க வேன்டும்.
- குறிப்பு (நோட்ஸ்) எடுத்தல்:
- ஒவ்வொரு பாடத்தைப் படிக்கும் போது முக்கியமான தகவல்களை (Dates, Names, Facts) தனி நோட்டில் எழுதி வைக்கவும். இது கடைசி நேரத் திருப்புதலுக்கு உதவும்.
- முந்தைய ஆண்டு வினாக்கள் (TNPSC PYQ):
- கடந்த 5 ஆண்டுகால வினாத்தாள்களைத் தீர்த்துப் பாருங்கள். கேள்விகள் எப்படிக் கேட்கப்படுகின்றன என்ற புரிதல் கிடைக்கும்.
- மாதிரித் தேர்வுகள் (Mock Tests):
- பாடங்களை முடித்த பின் வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். இது நேர மேலாண்மையை (Time Management) மேம்படுத்தும்.
TNPSC குரூப் 4 தேர்வு 2026: முதல் முயற்சியில் வெற்றி பெற 5 Tips
நீங்கள் ஒரு வெற்றியாளராக மாற இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
- தினசரி அட்டவணை: ஒரு நாளைக்குக் குறைந்தது 6 மணிநேரம் படிக்க ஒதுக்குங்கள்.
- முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்: கடந்த 5 ஆண்டுகால வினாக்களைத் தீர்த்துப் பார்ப்பது வினாக்களின் தரத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
- சுய குறிப்புகள் (Self Notes): படிக்கும் போதே முக்கியமான தகவல்களை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- மாதிரித் தேர்வுகள்: வாரத்திற்கு ஒரு முறையாவது முழு நீள மாதிரித் தேர்வை எழுதிப் பாருங்கள்.
- நடப்பு நிகழ்வுகள்: தினசரி செய்தித்தாள்களை வாசித்து முக்கிய நிகழ்வுகளைக் குறித்துக் கொள்ளுங்கள். TNPSC Daily Current Affairs in Tamil PDF – Download HERE
2026 TNPSC குரூப் 4 வெற்றிக்கான Golden Rules
- தமிழ் + Aptitude and Mental Ability(Math): இந்த இரண்டிலும் நீங்கள் 125-க்கு 115+ எடுத்தால், பாதி கிணறு தாண்டியதற்குச் சமம்.
- மீளாய்வு (Revision): வார நாட்களில் புதிய பாடங்களைப் படியுங்கள்; ஞாயிற்றுக்கிழமைகளில் படித்ததை மட்டும் திருப்புதல் செய்யுங்கள்.
- ஒரே மூச்சில் வெற்றி பெற: தேர்வு அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல், இப்போதே குறைந்தபட்சம் தினமும் 4-6 மணிநேரம் படிக்கத் தொடங்குங்கள்.
முடிவுரை
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவது என்பது உங்கள் உழைப்பையும் விடாமுயற்சியையும் பொறுத்ததாகும். தேர்வர்களாகிய நீங்கள் சரியான திசையில் பயணித்தால் இந்த வருடம் நீங்களும் அரசு அதிகாரி என்பது வெறும் கனவு மட்டுமல்ல, அது நிஜமாகும். “இதுவும் தாமதமில்லை” இப்போதே உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்! வாழ்த்துக்கள் !!!!
தேர்வு தொடர்பான தங்களது சந்தேகங்கள் இருந்தால் comment செய்யவும்

