TN 12th Result 2026 State Board Tamilnadu Full Details

TN 12th Result 2026

TN 12th Result 2026: State Board Tamilnadu Full Details

TN 12th Result 2026 State Board Tamilnadu

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம், மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு (12 ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியாக உள்ளது. மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் தற்காலிகமாக மே 8, 2026 , காலை 0930 – 1000 மணி அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி, tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது மதிப்பெண்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

12th Result 2026 State Board Tamilnadu |மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய!

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு 2026 ஆம் ஆண்டிற்க்கான தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது? தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் +2 HSE மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்:

12th Result 2026 State Board Tamilnadu
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் +2 HSE மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்:

  • tnresults.nic.in அல்லது dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • TN HSC result 2026 tab-ஐ கிளிக் செய்யவும்.
  • பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
  • TN 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026 வெளியிடப்படும்.
  • தற்காலிக மதிப்பெண் பட்டியலைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யவும்.

TN 12th Result 2026 State Board Tamilnadu: Important Link

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காலதாமதம் ஏற்பட வாய்ப்பு

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளால் ஏற்படும் காலதாமதத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2026: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

முதலில் மே 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்பதில் உள்ள காலதாமதத்தால் தற்காலிகமாகத் தள்ளிப்போயுள்ளது. அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவிக்கும்.

2. தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களின் முடிவுகளைச் சரிபார்க்கலாம்:

3. இணையதளம் தவிர்த்து வேறு வழிகளில் முடிவுகளை அறிய முடியுமா?

  • குறுஞ்செய்தி (SMS): மாணவர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு மதிப்பெண் விவரங்கள் தானாகவே அனுப்பப்படும்.
  • பள்ளிகள்: அந்தந்தப் பள்ளிகளிலும் முடிவுகள் வெளியிடப்படும்.
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசியத் தகவலியல் மையங்களிலும் (NIC) முடிவுகளைப் பார்க்கலாம்.

4. முடிவுகள் தாமதமாவதால் கல்லூரி சேர்க்கை பாதிக்கப்படுமா?

கலை மற்றும் அறிவியல் (Arts & Science) மற்றும் பொறியியல் (Engineering) படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு (Counselling) நடைபெறும் என்பதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

5. விடைத்தாள் மறுமதிப்பீடு (Re-valuation) செய்ய முடியுமா?

ஆம், தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுகூட்டல் (Re-totalling) அல்லது மறுமதிப்பீடு (Re-valuation) செய்ய விண்ணப்பிக்கலாம்.

6. உடனடித் தேர்வு (Supplementary Exam) எப்போது நடைபெறும்?

தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் உடனடித் தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் அதே கல்வி ஆண்டிலேயே மேற்படிப்பைத் தொடர முடியும்.

7. முடிவுகள் குறித்த கூடுதல் உதவிக்கு யாரைத் தொடர்புகொள்வது?

மாணவர்கள் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளானால், 14417 என்ற அரசு கல்வி உதவி மைய எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *