மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் | Muvalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme

Muvalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme

edu scheme
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

அறிமுகம்

ஒன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் பெயரில் நிறைவேற்றப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த திட்டம் திருமண உதவி திட்டம்.

திட்டம் தொடங்கப்பட்டது – 1989

உதவித் தொகை அல்லது நிதி உதவி

1. முதலில் ரூபாய் 5000/-  வழங்கப்பட்டது.

2. 2009இல் ரூபாய் 25000/- ஆக உயர்த்தப்பட்டு,

3. 2011 இல் ரூபாய் 50,000/- மற்றும் தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்பட்டது.

4. 2016 இல் ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கமாக வழங்கப்பட்டது.

திருமண உதவித் திட்டம் உயர்கல்வி உதவி திட்டமாக மாற்ற காரணம்

1.         24.5 விழுக்காடு பயனாளர்கள் மட்டுமே உண்மையான தகுதி உடையவர்கள்.

2.            இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பது.

3.         பெண்களில் 46% மட்டுமே உயர்நிலைக் கல்வியில் சேர்க்கை.

4.         பயனார்களின் எண்ணிக்கை

            1. திருமண உதவி திட்டத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் பயனார்கள்.

            2. உயர்க்கல்வி திட்டத்தில் வருடத்திற்கு 6 லட்சம் வரை.

உயர்கல்வி திட்டத்தின் நோக்கம்

கல்வியே நிரந்தர சொத்து என்னும் நோக்கில்

  1. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில்பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவி தொகை வழங்கும் திட்டமாகும்.
  2. திருமணத் தகுதி வருவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்கு கல்வி தகுதியை வழங்குவது.
  3. பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  4. ஏழை குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  5. உயர்நிலை கல்வியில் சேர்க்கையை அதிகரிப்பது.
  6. பெண்களின் அதிக அளவில் கல்வி தகுதி அடைய வித்திடக்கூடிய திட்டமாகும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்

  1. மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உள்ள உயர் கல்வி பெறவேண்டும்.
  2. தனியார் பள்ளிகளில் RTE உதவி மூலம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படித்து பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் தகுதி உடையவர்கள்.
  3. உயர்கல்வி என்பது முறையான கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  4. தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி கல்விக்கு பொருந்தாது.

பிற தகவல்கள்

விண்ணப்பிக்கும் முறை

  1. மாணவிகள் இளநிலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
  2. திட்டத்தின் தகவலைப் பெற இலவச அழைப்பு எண் அல்லது உதவி எண் 14417க்கு அழைக்கலாம்

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *