Bio RIDE Scheme : பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 18.09.2024 நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, “உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development – Bio RIDE)” என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் மூன்று பரந்த அம்சங்களைக் கொண்டுள்ளது:
1. உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி – மேம்பாடு (R&D);
2. தொழில்துறையினர், தொழில்முனைவோர் மேம்பாடு (I&ED)
3. உயிரி உற்பத்தி, உயிரி பவுண்டரி
நிதி ஒதுக்கீடு
2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான ‘Bio RIDE‘ திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு ரூ.9197 கோடியாகும்.
நோக்கம்
- இது ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல், தயாரிப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல், கல்வி ஆராய்ச்சி – தொழில்துறை பயன்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பயோ-ரைடு திட்டம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், உயிரி தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், உயிரி உற்பத்தி, உயிரி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமைத்துவ நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தூய்மையான எரிசக்தி போன்ற தேசிய, உலகளாவிய சவால்களை சமாளிக்க உயிரி கண்டுபிடிப்புகளின் திறனைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் இயக்கத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயோ-ரைடு திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- உயிரி தொழில்முனைவை ஊக்குவித்தல்
- தொழில்-கல்வி ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
- நீடித்த உயிரி உற்பத்தியை ஊக்குவித்தல்
- புற நிதி மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு
- உயிரி தொழில்நுட்பத் துறையில் மனித வளத்தை வளர்த்தல்
Leave a Reply