GeM (Government e-Marketplace)
GeM (Government e-Marketplace) | அரசு மின் சந்தை
GeM என்றால் என்ன?
- GeM (Government e-Marketplace) என்பது அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்ய உருவாக்கப்பட்ட தேசிய மின்னணு சந்தை தளமாகும்.
- வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (Ministry of Commerce & Industry) கீழ் செயல்படுகிறது.
- 09 ஆகஸ்ட் 2016 அன்று தொடங்கப்பட்டது.
GeM-ன் நோக்கம்
- அரசாங்க கொள்முதலில் வெளிப்படைத்தன்மை (Transparency) ஏற்படுத்துதல்.
- திறன் (Efficiency) மற்றும் வேகத்தை (Speed) அதிகரித்தல்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்.
- முழுமையான Paperless, Cashless, Contactless கொள்முதல் முறையை உருவாக்குதல்.
GeM-ன் முக்கிய கோட்பாடுகள்
- Openness (திறந்த அணுகல்)
- அனைத்து விற்பனையாளர்களுக்கும் சம வாய்ப்பு.
- Fairness (நியாயம்)
- பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களுக்கு சம போட்டி.
- Inclusiveness (உள்ளடக்கம்)
- MSME, பெண்கள் தொழில்முனைவோர், Startups உள்ளிட்ட அனைவருக்கும் பங்கேற்பு வாய்ப்பு.
GeM-ன் முக்கிய அம்சங்கள்
- e-Bidding
- Reverse e-Auction
- Demand Aggregation
- ஆன்லைன் கட்டண வசதி
- நேரடி கொள்முதல் மற்றும் போட்டி ஏலம் வசதி
- GeMmy Chatbot உதவி சேவை
கொள்முதல் வரம்புகள்
- ₹25,000 வரை நேரடி கொள்முதல் செய்யலாம்.
- ₹25,000-க்கு மேல் விலை ஒப்பீடு, ஏலம் அல்லது Reverse Auction மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
MSME மற்றும் Startups-க்கு ஆதரவு
- MSME நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்க GeM முக்கிய பங்கு வகிக்கிறது.
- Startup Runway 2.0 மூலம் புதிய நிறுவனங்கள் அரசின் கொள்முதல் சந்தையில் பங்கேற்க முடிகிறது.
- பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் Startups-க்கு தனித்துவமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
GeM-ன் சாதனைகள்
- 2026 ஆம் ஆண்டில் GeM மூலம் மொத்த வர்த்தக மதிப்பு (GMV) ₹18.4 லட்சம் கோடியை எட்டியது.
- FY 2025-26 இல் மட்டும் ₹5 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட வர்த்தகம் நடைபெற்றது.
- 11 லட்சத்திற்கும் மேற்பட்ட MSME-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
GeM SPV
- GeM Special Purpose Vehicle (SPV) என்பது GeM தளத்தை நிர்வகிக்கும் நிறுவனமாகும்.
- இது 17 மே 2017 அன்று நிறுவப்பட்டது.


