இந்தியாவின் விண்வெளித் திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), குறைந்த செலவில் நடைமுறைப்படுத்திய செவ்வாய் கிரக மிஷன் (மங்கள்யான்) முதல், சந்திரயான் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக செய்த சந்திர ஆய்வுகள் வரை பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டியுள்ளது. இந்த சாதனைகள் இந்தியாவை ஒரு முக்கியமான விண்வெளி சக்தியாக உலக அரங்கில் நிலைநிறுத்தியதோடு, அறிவியல் ஆராய்ச்சி, செயற்கைக்கோள் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் கிடைத்துள்ள இத்தகைய சிறப்பு சாதனைகள் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தொடக்கம் (ISRO)
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – டாக்டர் விக்ரம் சாராபாய்.
- இந்தியா விண்வெளியில் தொழில்நுட்ப முன்னேற்றம் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை.
- 1962 – ஜவஹர்லால் நேரு மற்றும் சாராபாய் இணைந்து INCOSPAR நிறுவினர்.
- 1969 – INCOSPAR → ISRO உருவாக்கம்.
- ISRO தலைமையகம் – பெங்களூர்.
தொடக்க கால சாதனைகள்
- திருவனந்தபுரம் அருகே தும்பா ராக்கெட் ஏவுதளம் (TERLS) நிறுவப்பட்டது.
- ரோகிணி ஒலி ராக்கெட்டுகள் உருவாக்கம்.
- 1972 – தனி விண்வெளித் துறை நிறுவப்பட்டது.
செயற்கைக்கோள் தொழில்நுட்ப முன்னேற்றம்
- 1975 – இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா (சோவியத் உதவியுடன் ஏவப்பட்டது).
- INSAT அமைப்பு – ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பு.
- பயன்பாடுகள் – வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை, தேடல் & மீட்பு சேவைகள்.
ஏவுதள வாகனங்களின் முன்னேற்றம்
- SLV – நான்கு நிலை திட எரிபொருள் ராக்கெட் (அமெரிக்க Scout ராக்கெட்டால் ஈர்க்கப்பட்டது).
- ASLV – 1992ல் முதல் வெற்றிகரமான ஏவுதல்.
- PSLV – 1993ல் முதல் ஏவுதல் (தோல்வி), 1994 முதல் வெற்றி; ISROவின் “Workhorse launcher”.
- GSLV தொடர் – 2001ல் முதல் மேம்பாட்டு விமானம்.
- GSLV MK III (LVM-3) – மிக சக்திவாய்ந்த உள்நாட்டு ஏவுதளம், 2007ல் உள்நாட்டு கிரையோஜெனிக் இயந்திரம் சோதனை.
முக்கிய மிஷன்கள்
- சந்திரயான்-1 (2008) – இந்தியாவின் முதல் சந்திர பணி.
- மங்கள்யான் (MOM) – 2013ல் தொடங்கிய செவ்வாய் பணி.
- சந்திரயான்-2 (2019) – GSLV MKIII மூலம் ஏவப்பட்டது.
- எதிர்கால இலக்கு – மனிதர் பயணம் (Gaganyaan Project).
முக்கிய சாதனைகள்
- பிப்ரவரி 15, 2017 – PSLV-C37 மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் ஏவுதல் (உலக சாதனை).
- இதில் CARTOSAT-2, INS A, INS B மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அடங்கும்.
- இந்தியா – தொலைதூர உணர்தல், தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று.
முன்னோக்கிய பாதை
1. ஆராய்ச்சி, புதுமை மற்றும் உள்கட்டமைப்பு
- மனித விண்வெளிப் பயணம் (Gaganyaan 1. திட்டம்).
- ஆழமான விண்வெளிப் பயணங்கள் (Deep Space Missions).
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள தொழில்நுட்பம் (Reusable Launch Vehicle).
2. சர்வதேச ஒத்துழைப்பு
- உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு பணி.
- அறிவு பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு.
- பெரிய மற்றும் சிக்கலான மிஷன்களுக்கு ஆதரவு.
3. தனியார் துறையின் பங்கு
- கொள்கைகள் மற்றும் சலுகைகள் மூலம் ஊக்குவிப்பு.
- உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு தனியார் பங்களிப்பு.
- விண்வெளி சார்ந்த பயன்பாடுகளை அதிகரித்தல் (Communication, Remote Sensing, Navigation).
4. வள ஆய்வு மற்றும் பொருளாதாரம்
- சந்திரன் மற்றும் சிறுகோள்களில் சுரங்க வளங்களைப் பயன்படுத்துதல்.
- விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்களை விரிவாக்குதல்.
- விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துதல்.
5. கல்வி மற்றும் திறன் மேம்பாடு
- விண்வெளி அறிவியல் கல்வி மேம்பாடு.STEM (Science, Technology, Engineering, Mathematics) திட்டங்களை ஊக்குவித்தல்.
- திறமையான பணியாளர்களை உருவாக்கி, நீண்டகால விண்வெளி லட்சியங்களை நிலைநிறுத்துதல்.
முடிவுரை
இந்தியாவின் விண்வெளித் திட்டம் இன்று தொழில்நுட்ப வலிமை, புதுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது.சந்திரயான், மங்கள்யான் போன்ற மிஷன்கள், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் குறைந்த செலவு ஏவுதளங்கள் மூலம், இந்தியா உலகின் முன்னணி விண்வெளி நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.எதிர்காலத்தில் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள:மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும்.தனியார் துறை பங்குபற்றலை அதிகரிக்க வேண்டும்.மனித விண்வெளிப் பயண திறனை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு சாதனைகளைக் கட்டியெழுப்பி, இந்தியா விண்வெளி ஆய்வு மற்றும் உலகளாவிய அறிவியல் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும்.


Leave a Reply