மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் | Genetically Modified (GM) Crops

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் genetically modified Crops

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் | Genetically Modified (GM) Crops மரபணு மாற்றம், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள் அவற்றின் நோக்கம் வகைகள், பயன்கள் மற்றும் தீமைகள் பற்றி பார்ப்போம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்றால் என்ன? பயிர்களின் வகைகள் மற்றும் நன்மைகள் தீமைகளை விவரி.

நன்றி : இந்து தமிழ் 04.11.22
Table of Contents

மரபணு மாற்றம் என்பது என்ன ?

ஒரு குறிப்பிட்ட உயிரியின் உடலில் ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பெற்றுள்ள மரபணுவைப்(Gene) பிரித்தெடுத்து, மற்றோரு உயிரியின் உடலில் செலுத்தி குறிப்பிட்ட ஓங்கு தன்மையைப் பெறும் செயல்.

மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் ?

 1. மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் மரபணு மாற்றப்பட்ட வாழும் உயிரினங்கள் ஆகும்.
 2. மரபணு மாற்றம்  இயற்கையில் அல்லது பாரம்பரிய கலப்பின முறைகள் மூலம் ஏற்படுகின்றன.

மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள்?

மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள் வேறொரு உயிரியின் புதுமையான DNA நுழைக்கப்பட்ட மரபணுத் தொகையம் பெற்றத் தாவரங்களாகும்.

நோக்கம்

பயிர் பெருக்கம் அல்லது மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள்.

 1. தகுந்த சூழ்நிலையில் பயிர் வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த தரம், நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்ப் பெருக்கம்  ஆகும்.
 2. மனிதத் தேவைக்காகத் தாவரச் சிற்றினங்களின் மரபணுவகைய விகிதத்தையும், புறத்தோற்ற வகைய விகிதத்தையும் ஒரு குறிக்கோளுடன் மாற்றியமைத்துக் கையாளுதலைக் குறிக்கும்.

பயிர் பெருக்கத்தின் குறிக்கோள்கள்

 1. பயிர்களின் விளைச்சலையும், வீரியத்தையும், வளமையையும் அதிகரித்தல்.
 2. வறட்சி, வெப்பநிலை , உவர்தன்மை மற்றும் அனைத்துச் சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன்.
 3. முதிர்ச்சிக்கு முன்னரே மொட்டுகள் மற்றும் பழங்கள் உதிர்வடைதலை தடுத்தல்.
 4. சீரான முதிர்ச்சியை மேம்படுத்தல்.
 5. பூச்சி மற்றும் நோய் உயிரிகளை எதிர்த்து வாழும் திறன்.
 6. ஒளி மற்றும் வெப்பக் கூருணர்வு இரகங்களை உருவாக்குதல்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் : வகைகள்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் genetically modified Crops

களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை – கிளைபோசேட் (Glyphosate)

 1. தயாரிப்பு – கிளைபோசேட் களைக்கொல்லி அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ (Monsanto) மூலமாக தயாரிக்கப்படுகிறது.
 2. வணிக பெயர் ’ரவுண்ட் அப்’ ஆகும்.

களைக்கொல்லியைத் தாங்கும் தன்மையுடைய தாவரங்களின் அனுகூலங்கள் (Advantage of herbicide tolerant crops)

 1. களைகள் குறைக்கப்படுவதால் விளைச்சல் அதிகரிக்கிறது.
 2. களைக் கொல்லி தெளிப்பு குறைகிறது.
 3. தாவரங்களுக்கும், களைகளுக்கும் இடையேயான போட்டி குறைகிறது.
 4. குறைவான நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ காணப்படும்.
 5. மண்ணின் தன்மையையும், நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம் .

பூச்சிகள் எதிர்ப்புத் தன்மை – Bt பயிர்கள் (Insect resistance – Bt crops)

Bt பருத்தி (Bt Cotton)

 1. Bt பருத்தி என்பது மரபணு மாற்றபட்ட ஒரு உயிரினம் (GMO) அல்லது மரபணுச்சார் மாற்றம் செய்யப்பட தீங்குயிரி (pest) எதிர்ப்பு பெற்ற பருத்தித் தாவர ரகமாகும்.
 2. இது காய்புழுவிற்கு (bollworm) எதிரான பூச்சி எதிர்ப்புத்தன்மையை கொண்டுள்ளது.
 3. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் ( Bacillus thuringiensis) என்ற பாக்டீரியத்தின் ரகங்கள் 200-க்கு அதிகமான வெவ்வேறு Bt நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
 4. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பூச்சிகளுக்கு தீங்கிழைக்கின்றன.
 5. பெரும்பாலான Bt நச்சுகள் லார்வா நிலையிலுள்ள அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள், பருத்திக்காய்ப் புழுக்கள், உண்ணி (gad flies) போன்றவற்றை அழிக்கிறது.
 6. ஆனால் மற்ற உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை .

நன்மைகள்

Bt பருத்தியின் நன்மைகள் பின்வருமாறு

 1. பருத்தி விளைச்சல் அதிகரிக்கிறது, ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது.
 2. Bt பருத்தி பயிரிடுவதில் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குறைக்கப்படுகிறது.
 3. பயிர் வளர்ப்பில் உண்டா கும் செலவு குறைகிறது.

தீமைகள்

Bt பருத்தியின் தீமைகள் பின்வருமாறு

 1. Bt பருத்தி விதையின் விலை அதிகம்.
 2. இதன் வீரியம் முதல் 120 நாட்கள் மட்டுமே . பின்னர் இதன் வீரியம் குறைகிறது.
 3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள் (Jassids),  அசுவினிப் பூச்சிகள் (aphids) , வெள்ளை ஈக்கள் (white flies) போன்றவற்றிற்கு எதிராக இது செயல்படுவதில்லை.
 4. மகரந்தச்சேர்க்கையில் துணை புரியும் பூச்சிகளை பாதிக்கிறது. இதனால் விளைச்சல் குறைகிறது.

Bt கத்திரிக்காய் (Bt Brinjal)

 1. வெவ்வேறு வகை கத்திரிக்காய் பயிர் ரகங்களின் மரபணுத் தொகையத்திற்குள் பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் எனும் மண் வாழ் பாக்டீரியத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட படிக புரத மரபணு (Cry1Ac) என்ற மரபணுவை நுழைப்பதால் உருவாக்கப்பட்டதாகும்.
 2. இந்த மரபணுவுடன் சேர்ந்து முன்னியக்கிகள் (promotors), முடிவுறுத்தி (terminator) ஒரு உயிரிஎதிர்ப்பொருள் தடை (antibiotic resistance), அடையாளக் குறி மரபணு (marker gene) போன்றவை அக்ரோபாக்டீரியம் வழி ஏற்படுத்தப்படும்.
 3. உள்நுழைத்தல் மூலம் மரபணு மாற்றம் செய்யப்படுகிறது.
 4. Bt கத்திரிக்காய் லெபிடோப்டெரா (lepidoptera) வகை பூச்சிகளுக்கு குறிப்பாக கத்திரிக்காய் மற்றும் தண்டு துளைப்பானுக்கு (leucinodes orbonalis) எதிராக உருவாக்கப்பட்டுள்ளது.

தாரா கடுகு கலப்பினம் (Dhara mustard Hybrid – DMH)

 1. அரசு உதவி செயல்திட்டத்துடன் டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்களில் மரபணுச்சார் மாற்றங்களை  கையாளும் அறிவியல் மையத்தின் அறிவியல் அறிஞர் குழுவினரால் மரபணு மாற்ற மடைந்த DMH – 11 என்ற கடுகு ரகம் உருவாக்கப்பட்டது.
 2. இது களைக் கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற (Herbicide tolerant – HT), மரபணு மாற்றபட்ட தாவரமாகும்.
 3. இது பர்னேஸ் / பார்ஸ்டார் (Barnase / Barstar) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மண்ணில் வாழும் பாக்டீரியத்தின் மரபணு சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் கடுகு வகையாகும்.
 4. இது ஓர் தன்மகரந்தச்சேர்க்கை தாவரமாகும்.
 5. மண்வாழ் பாக்டீரியத்திலிருந்து DMH – 11 மூன்று மரபணுக்களைக் கொண்டுள்ளது.
 6. அவை ஃபார் மரபணு (Bar gene), பர்னேஸ் மரபணு (Barnase gene) மற்றும் ஃபார்ஸ்டார் மரபணு (barstar gene).
 7. இந்த பார் மரபணு, தாவரத்தை ஃபாஸ்டா என்னும் களைக் கொல்லிக்கு எதிர்ப்புத்தன்மை உடையதாக்குகிறது.

வைரஸ் எதிர்ப்புத்தன்மை (Virus Resistance)

 1. பல தாவரங்கள் வை ரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. இதனால் அதிக இழப்பும் மற்றும் இறப்பும் உண்டாகின்றன.
 2. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வைரஸிற்கு எதிரான மரபணுக்கள் ஓம்புயிரினுள் செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் வைரஸ் எதிர்ப்புத் தன்மை உருவாக்கப்படுகிறது.
 3. வைரஸ் DNA வைச் செயலிழக்கச் செய்யக்கூடிய தடை மரபணுக்களை நுழைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.

ஃபிளேவர்சேவர் தக்காளி (FlavorSavr tomato)

 1. அக்ரோ பாக்டீரியத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பொறியியல் மூலமாக FlavrSavr தக்காளி உருவாக்கப்படுகிறது.
 2. தக்காளி நீண்ட நாட்களுக்கு இயல்பான நிறம் மற்றும் மணம் மாறாமல் நிலைநிறுத்தி வைக்கப்படுகிறது.
 3. மரபணுப் பொறியியலின் மூலம் தக்காளிக்காய் பழுத்தல் தாமதப்படுத்தப்படுகிறது மற்றும் இதன் மூலம் கனி மென்மையாவது தடுக்கப்படுகிறது மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
 4. உணர்தடை மரபணு (anti sense gene) அக்ரோபாக்டிரிய வழி மரபணு மாற்ற செயல்பாட்டு முறையால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தக்காளி உருவாக்கப்படுகிறது. இதில் வெளிப்பாட்டிற்கு எதிரான மரபணு (antisense gene) நுழைக்கப்படுகிறது.
 5. இந்த மரபணு பாலிகேலக்டுரோனேஸ் (polygalacturonase) நோதியின் உற்பத்தியை இடையீடு (interferes) செய்கிறது. இதனால் காய் கனியாவது தாமதமாகிறது.
 6. இதன் மூலம் தக்காளியை நீண்ட நாள் சேமிப்பின் போதும் நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் போதும் தக்காளியை கெடாமல் பாதுகாக்கலாம்.

பொன்நிற அரிசி – உயிரிவழி ஊட்டம் சேர்த்தல் (Golden rice – Biofortification) (TNPSC Previous Question – தங்க அரிசி பற்றி எழுதுக.)

 1. மரபணு பொறியியலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொன்நிற அரிசி (ஒரைசா சட்டைவா – அரிசி)இன் ஒரு ரகமாகும்.
 2. உயிரிச்செயல் மூலம் உருவாக்கப்பட்ட வைட்டமின் A-வின் முன்னோடியான பீட்டா கரோட்டின் அரிசியின் உண்ணும் பகுதியில் நுழைக்கப்படுவதாகும்.
 3. இங்கோ போட்ரிகஸ் (Ingo Potrykus) மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது.
 4. நோக்கம் நெல் பயிரிடப்படும் பகுதி மற்றும் பயன்படுத்தப்படும் பகுதிகளில் நிலவும் வைட்டமின் A குறைப்பாட்டை நீக்குதலாகும்.
 5. இதனால் ஐந்து வயதிற்குட்பட்ட அதிக அளவிலான குழந்தைகளின் இறப்பு குறைக்கப்படும்.
 6. பொன்நிற அரிசி அதன் பெற்றோரை விட கூடுதலாக சேர்க்கப்பட்ட மூன்று வகையான பீட்டா –கரோட்டீன் உருவாக்க மரபணுக்களைக் கொண்டுள்ளது.
 7. இது மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.
 8. பொன்நிற அரிசி குழந்தைகளில் நிலவும் குருட்டுத் தன்மை (blindness), விழிவெண்படல வறட்சி (Xerophthalmia) ஆகியவற்றை  கட்டுப்படுத்துகிறது.

மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (GM food) – நன்மைகள்

 1. தீங்குயிரி (pest) அற்ற அதிக விளைச்சல்.
 2. பூச்சிக் கொல்லி பயன்பாடு 70% அளவு குறைப்பு.
 3. மண் மாசுப்பாடு பிரச்சைனையைக் குறைக்கிறது.
 4. மண் நுண்ணுயிரித் தொகை பேணப்படுகிறது.

மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (GM food) – தீமைகள்

 1. மரபணுக்கள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.
 2. பறவைகள், பூச்சிகள் மற்றும் மண்ணின் உயிரணுக்களின் மீதான தாக்கம்.
 3. கல்லீரலை பாதிக்கிறது, சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது,
 4. புற்றுநோயை உண்டாக்குகிறது.
 5. ஹார்மோன் சமனின்மை மற்றும் உடல்நிலை சீர்குலைவு (physical disorder).
 6. பாக்டீரிய புரதத் தின் காரணமாக நோய் எதிர்ப்புத்தன்மை தொகுதியில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
 7. பிறழ்ச்சியடைந்த அதிர்ச்சி ( திடீர் மிகையுணர்வு வினை) (Anaphylactic shock) மற்றும் ஒவ்வாமை.
 8. விதைகளின் உயிர்ப்புத் தன்மை இழப்பு GM பயிர்களின் முடிவுறுத்தி விதைத் தொழில்நுட்பத்தில் (Terminator seed technology) காணப்படுவது.

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC)

 1. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (MoEF&CC) கீழ் செயல்படுகிறது.
 2. அமைப்பு : MoEF&CC இன் சிறப்புச் செயலாளர்/கூடுதல் செயலாளரால் தலைமை தாங்கப்படுகிறது மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையின் (DBT) பிரதிநிதி ஒருவரால் இணைத் தலைவராக உள்ளார்.
 3. 24 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்ய ஒவ்வொரு மாதமும் கூடுகிறது.
 4. செயல்பாடுகள்:
  • விதிகள், 1989 இன் படி, சுற்றுச்சூழல் கோணத்தில் இருந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை உற்பத்தியில் அபாயகரமான நுண்ணுயிரிகள் மற்றும் மறுசீரமைப்புகளின் பெரிய அளவிலான பயன்பாட்டை உள்ளடக்கிய செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு இது பொறுப்பாகும்.
  • மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட (GE) உயிரினங்கள் மற்றும் தயாரிப்புகளை சுற்றுச்சூழலில் வெளியிடுவது தொடர்பான முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கும் இது பொறுப்பாகும்.
  • இது GM தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியை மதிப்பிடுகிறது மற்றும் அவற்றை விவசாயி வயல்களில் வெளியிட பரிந்துரைக்கிறது அல்லது மறுக்கிறது.

Source GEAC : PIB https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844666

நன்றி : இந்து தமிழ் 04.11.22 & பள்ளி புத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023