Muvalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme
அறிமுகம்
ஒன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் பெயரில் நிறைவேற்றப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த திட்டம் திருமண உதவி திட்டம்.
திட்டம் தொடங்கப்பட்டது – 1989
உதவித் தொகை அல்லது நிதி உதவி
1. முதலில் ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.
2. 2009இல் ரூபாய் 25000/- ஆக உயர்த்தப்பட்டு,
3. 2011 இல் ரூபாய் 50,000/- மற்றும் தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்பட்டது.
4. 2016 இல் ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கமாக வழங்கப்பட்டது.
திருமண உதவித் திட்டம் உயர்கல்வி உதவி திட்டமாக மாற்ற காரணம்
1. 24.5 விழுக்காடு பயனாளர்கள் மட்டுமே உண்மையான தகுதி உடையவர்கள்.
2. இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பது.
3. பெண்களில் 46% மட்டுமே உயர்நிலைக் கல்வியில் சேர்க்கை.
4. பயனார்களின் எண்ணிக்கை
1. திருமண உதவி திட்டத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் பயனார்கள்.
2. உயர்க்கல்வி திட்டத்தில் வருடத்திற்கு 6 லட்சம் வரை.
உயர்கல்வி திட்டத்தின் நோக்கம்
கல்வியே நிரந்தர சொத்து என்னும் நோக்கில்
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில்பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவி தொகை வழங்கும் திட்டமாகும்.
- திருமணத் தகுதி வருவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்கு கல்வி தகுதியை வழங்குவது.
- பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
- ஏழை குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
- உயர்நிலை கல்வியில் சேர்க்கையை அதிகரிப்பது.
- பெண்களின் அதிக அளவில் கல்வி தகுதி அடைய வித்திடக்கூடிய திட்டமாகும்.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்
- மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உள்ள உயர் கல்வி பெறவேண்டும்.
- தனியார் பள்ளிகளில் RTE உதவி மூலம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படித்து பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் தகுதி உடையவர்கள்.
- உயர்கல்வி என்பது முறையான கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி கல்விக்கு பொருந்தாது.
பிற தகவல்கள்
விண்ணப்பிக்கும் முறை
- மாணவிகள் இளநிலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
- திட்டத்தின் தகவலைப் பெற இலவச அழைப்பு எண் அல்லது உதவி எண் 14417க்கு அழைக்கலாம்
Leave a Reply