“அகல் விளக்கு திட்டம் : தமிழக பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்கான புதிய முயற்சி”

அகல் விளக்கு திட்டம் – முக்கிய அம்சங்கள்
- தமிழக அரசின் புதிய திட்டம் – அகல் விளக்கு.
- கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
1. அறிமுகம்
2. நோக்கம்
- 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை உடல், மன, சமூக ரீதியான இடையூறுகளிலிருந்து பாதுகாக்குதல்.
- மாணவிகள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க உதவுதல்.
3. திட்டத்தின் அவசியம்
- மாணவிகள் உடல்நலம், மனநலம், சமூக அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகளை சந்திப்பது.
- இணையதளம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்தல்.
- சில மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுதல்.
4. முக்கிய அம்சங்கள்
- மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமல்படுத்துதல்.
- 9-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக தனி குழுக்கள் அமைத்தல்.
- குழுவில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உறுப்பினர்களாக இருப்பர்.
- மாணவிகளின் பிரச்சினைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து தீர்வு அளிப்பர்.
- இணையதள பயன்பாடு, மனநல பிரச்சினைகள், சமூக அழுத்தங்களுக்கு தீர்வு காணுதல்.
- மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்குதல் – பிரச்சினைகளை அணுகும் முறைகள், மீள்வது குறித்து வழிகாட்டுதல்.
5. முக்கியத்துவம்
- மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முக்கிய பங்காற்றும்.
- கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஆதரவாகும்.
error: Content is protected !!
Leave a Reply