ஓரெழுத்து ஒரு மொழி என்பது, ஓர் எழுத்து, ஒரு சொல்லாக தனித்து நின்று பொருள் தருவது ஆகும். எடுத்துக்கட்டாக – ஆ, கோ, கை, போ, தை ஆகிய எழுத்துகள், ஒரே ஒரு ஒரு பொருள் தருவதாக உணர்வீர்கள். (Oreluthu Oru Mozhi Sorkal – IMPORTANT FOR TNPSC GROUP 4 GENERAL TAMIL)

பவணந்தி முனிவரின், இலக்கண நூலான நன்னூலில் 42 ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் உள்ளதாகப் கூறுகிறார்.
ஓரெழுத்து ஒருமொழியின்(42) பொருள் அறிவோம்
| ஓரெழுத்து ஒருமொழி | பொருள் |
| ஆ | பசு |
| ஈ | கொடு |
| ஊ | இறைச்சி |
| ஏ | அம்பு |
| ஐ | தலைவன் |
| ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
| கா | சோலை |
| கூ | பூமி |
| கை | ஒழுக்கம் |
| கோ | அரசன் |
| சா | இறந்துபோ |
| சீ | இகழ்ச்சி |
| சே | உயர்வு |
| சோ | மதில் |
| தா | கொடு |
| தீ | நெருப்பு |
| தூ | தூய்மை |
| தே | கடவுள் |
| தை | தைத்தல |
| நா | நாவு |
| நீ | முன்னிலை ஒருமை |
| நே | அன்பு |
| நை | இழிவு |
| நோ | வறுமை |
| பா | பாடல் |
| பூ | மலர் |
| பே | மேகம் |
| பை | இளமை |
| போ | செல் |
| மா | மாமரம் |
| மீ | வான் |
| மூ | மூப்பு |
| மே | அன்பு |
| மை | அஞ்சனம் |
| மோ | முகத்தல் |
| யா | அகலம் |
| வா | அழைத்தல் |
| வீ | மலர் |
| வை | புல் |
| வெள | கவர் |
| நொ | நோய் |
| து | உண் |
TEST YOUR PREPRATION – TAMIL PYQ TEST FREE – CLICK HERE
FOR MORE STUDY MATERIALS – CLICK HERE


Leave a Reply