நான் முதல்வன் திட்டம் | Naan Mudhalvan Scheme

முன்னுரை 
       “நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா” ! என்று மகாகவி பாரதியின்     வரிகளை மேய்பிக்கும் வகையாக தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டமாக வடிவமைக்கப்பட்டு இலச்சினையுடன் வெளியிட்டார்.
தொடக்கம் 
     1.	1 மார்ச் 2022, தமிழக முதல்வர் அவர்கள்
நான் முதல்வன் திட்டதின் நோக்கம்  
     1. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில் ஆற்றலில்,  
        திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்.
     2. தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் 
        மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் 
        வழிகாட்டுதலை வழிகாட்டுதல் வழங்கும் திட்டமாகும்.
நான் முதல்வன் திட்டதின் முக்கிய சிறப்பம்சம் (See short notes below) 
     1.	அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களின் தனித் 
        திறமைகளை அடையாளம் கண்டு மேலும் ஊக்குவிப்பதாகும்.
     2.	வழிகாட்டுதல்கள் - உயர்கல்விக்கான வழிகாட்டுதல் வழங்குதல்.
     3.	சிறப்பு பயிற்சிகள்
        a.	தமிழில் தனித்திறன் பெறவும் பயிற்சிகள் வழங்குதல்.
        b.	ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாக பேசவும் 
        c.	நேர்முகத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படும்.
        d.	தொழில்நுட்ப பயிற்சிகள் –கோடிங்(Coding), ரோபோடிக்ஸ் (Robotics) போன்றவை…
        e.	கோடை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.
        f.	ஆலோசனைகளும் மற்றும் விழிப்புணர்வு 
                i.	ஊட்டச்சத்து மற்றும் திடமான உணவு குறித்தும்
                ii.	நாகரிகம், மக்களோடு பழகுதல் 
                iii.	உடற்பயிற்சி மற்றும் 
                iv.	தமிழ் பண்பாடு மற்றும் மரபு குறித்த விழிப்புணர்வு
        g.	வழிகாட்டி ஆலோசனை மையம் 
                i.	9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான 
                ii.	சிறப்பு கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் 
        h.	இண்டஸ்ட்ரி (Industry 4.0) தரம் 
                i.	அரசின் தொழில் பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்
                ii.	தகுதிக்கு ஏற்ப சேர்க்கையும் வழங்கப்படும்
        j.	திட்டத்தின் சிறப்புகளை தாங்கும் போர்டல் 
                i.	https://www.naanmudhalvan.tn.gov.in
முடிவுரை 
           தமிழக முதல்வரின் இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்திக்கும் திறன் படைத்தவர்களாக, தனித்திறமை கொண்டவர்களாக, தொழில் திறன் கொண்டவர்களாக, நிறுவனங்களை நடத்துபவர்களாக இருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முக்கிய சிறப்பு அம்சங்கள் (Short Notes)
1. படிப்பை கவனிப்பது.
2. தனித்திறமையை வளர்ப்பது மேம்படுத்துவது.
3. மனதில் அறிவியல் திறனை உருவாக்குவது.
4. தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டுவது.
5. விருப்பமான பயிற்சிக்கான வாய்ப்பை தருவது.
6. தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவது.
7. புதியதாக உருவான படிப்பை பற்றிய விழிப்புணர்வு வழங்குவது.
8. இளைஞர்களை மேற்கல்விக்கு தயார் படுத்துவது.
9. நவீனம் அனைத்தையும் மாணவர்கள் உள்ளங்கையில் கொண்டு சேர்ப்பது.
10. மொழித் திறனை மேம்படுத்துவது.
11. தாய் மொழி தமிழ் மொழியா? அதில் புலமை பெற செய்வது.
12. உலகம் மொழி ஆங்கிலமா? எழுதப் படிக்க, சரளமாக பேசவும் செய்வது.
13. உடற்பயிற்சி மற்றும் உள்ளப் பயிற்சி
14. மனப் பயிற்சி மற்றும் குணப் பயிற்சி



 
 
 
 
 
Leave a Reply to Prabhakaran V Cancel reply