மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையம் - தூத்துக்குடி | Floating Solar Power Plant - Thoothukudi
தொடக்கம்
07.03.2022, தமிழக முதல்வரால் இந்தியாவின் முதல் மற்றும் பிரமாண்ட மிதக்கும் சூரிய மின்
உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.
அமைவிடம்
தூத்துக்குடியில் உள்ள SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர்
தேக்கத்தில் அமைந்துள்ளது.
நோக்கம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மின் உற்பத்தி மற்றும் கார்பன் உமிழ் இவை
குறைப்பது ஆகும்.
திட்டத்தின் மதிப்பு
ரூபாய் 150.40 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ளது.
உற்பத்தி திறன்
1. ஆண்டிற்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
2. உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தங்களுடைய தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்படும்.
சிறப்பு அம்சங்கள்
1. 25.3 MW DC/22 MW AC திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையம்.
2. நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை SPIC
நிறுவனத்தின் ESG உத்தியவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
3. நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது.
4. இதைத் தவிர நீர் ஆவியாகாமல் 60% கட்டுப்படுத்தப்படும்.
5. சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவும்.
6. இந்த திட்டம் சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு மைல்கல் ஆகும்.
இதன் பயன்கள்
1. மிதக்கும் சோலார் திட்டங்கள், பாரம்பரிய நில அடிப்படையில் ஆனதை விட அதிக உற்பத்தி
செய்யும் ஆற்றல் கொண்டது.
2. ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி நீரை ஆவியாக்காமல் சேமிக்கிறது.
3. இதன் அனைத்து மின்சாரமும் SPIC மற்றும் Greenstar உரங்களின் உற்பத்தி
நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
சூரிய மின்னாற்றல் என்றால் என்ன ?
சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். சூரிய ஒளி நேரடியாக மின்னழுத்திகளின் செயல்பாட்டின் மூலம் மறைமுகமாகச் செறிவூட்டும் பெறப்படுகிறது.
செறிவூட்டல் முறை
1. பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய
ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு.
2. அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது.
3. ஒளிமின்னழுத்தி முறையில், ஒளிமின் விளைவைப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக
மின்னோட்டமாக மாற்றப்படுகிறது.
முடிவுரை
புதுப்பிக்கத்தக்க ஏரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை
அடைவதற்கான ஒரு மைல்கல்லாக அமையும்.
Please drop your valuable comments.
நன்றி : தமிழரசு
One response to “மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையம் – தூத்துக்குடி | Floating Solar Power Plant – Thoothukudi”
Leave a Reply to Prabu Cancel reply