child’s first 1000 days of life | குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள்

child’s first 1000 days of life : குழந்தைகளையும், தாய்மார்களையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும் வகையில் குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல் நாட்கள் நிதி உதவி திட்டத்தை தமிழகத்திலே முதல் முறையாக தொடங்கப்பட்டது.

first 1000 days

குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள் திட்டம் | child’s first 1000 days of life

1. தொடக்கம்

தமிழகத்திலே முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டது.

2. திட்ட மதிப்பு

ரூ.38.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

3. நோக்கம்

  1. குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள் தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் ‘குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நாட்கள் நிதி உதவி‘ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  2. அதாவது, கருத்தறித்த நாள் தொடங்கி 2 வயது முடிவடையும் நாள் வரை கணக்கில் கொள்ளப்படும்,
  3. 270-280 நாட்கள் மகப்பேறு காலம், சிசு பருவம் 365 நாட்கள், குழந்தை பருவம் 365 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

4. நடைமுறை

தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில்

  1. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,
  2. ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள்
  3. உள்ள 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும்.

5. தவணை காலம்

குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்திற்காக கர்ப்பம் தரித்த உடன்

  1. முதல் தவணை (18-20-வது வாரம்) ரூ.1000
  2. இரண்டாம் தவணை (26-28-வது வாரம்) ரூ.1000,
  3. மூன்றாம் தவணை (37-38-வது வாரம்) ரூ.1000,
  4. 6-வது மாதம் 4-ம் தவணை ரூ.500,
  5. 12-வது மாதம் 5-ம் தவணை ரூ.500,
  6. 18-வது மாதம் 6-ம் தவணை ரூ.500,
  7. 24-வது மாதம் 7-ம் தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3 ஆயிரம்
  8. 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2 ஆயிரம் என மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
  9. இந்த தொகை முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு வழங்கப்படுவது குறித்து கட்டுப்பாடு ஏதும் இல்லை.

6. இத்திட்டத்தின் நன்மைகள்

  1. இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
  2. கர்ப்பகால ரத்தசோகை தடுக்கப்படும்.
  3. பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும்.
  4. 2 வருடங்களுக்கான குழந்தைகள் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
6efc525c2f0023f23d8ae709fa0f59a54ee462ae6a54678255fd33c37cc453f3?s=90&d=mm&r=g

Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
CRPF Constable Recruitment 2026 : Apply Now NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams