பசுமை தமிழ்நாடு இயக்கம் | Green Tamil Nadu Mission

பசுமை தமிழ்நாடு இயக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கம்

தொடக்கம் :

 1. 24.09.2022, தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது.
 2. இடம் – வண்டலூர், செங்கல்பட்டு மாவட்டம்.
 3. துறை. சுற்றுச்சுழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை. 

நோக்கம் :

 1. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் 23.8% மட்டுமே காடுகள் உள்ள நிலையை 33% சதவீதமாக உயர்த்துவதாகும்.
 2. வனங்களின் சுற்றுச்சூழல், சமூகத்திற்கு தூய காற்று, நீர் வளங்கள், வளமான மண், உயிர்ப்பன்மை, வாழ்வதற்கேற்ற சூழல் போன்றவற்றை வழங்குவதாலும்
 3. கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக்  கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு  சேவைகளை வனங்கள் வழங்குவதால்
 4. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனச்சூழலை பாதுகாத்திட தமிழக அரசின் நவடிக்கையாகும்.

நடைமுறை திட்டம்.

 1. முதல் கட்டமாக 37 மாவட்டங்களில் உள்ள 360 நாற்றமங்கால்கள் மூலம் 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்கப்படும்.
 2. 2022 இல் மார்ச் மாதத்தில் மரக்கன்று வளர்ப்பு பணி தொடங்கப்பட்டு, செப்டம்பரில் நடவுப்  பணிகள் தொடங்கப்பட்டது.
 3. ஐந்துவகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) நிலங்களின் மண் வளத்திற்கேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரங்கள் வளர்க்கப்படும்.
 4. கண்காணிப்பு
  • மாநில மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
  • நாற்றங்கால்/ மரம் வளர்ப்பு கண்காணிக்க பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தனி வலைதளம் www.greentamilnadumission.com  உருவாக்கப்பட்டுள்ளது.

மர வகை தேர்வின் முக்கியத்துவம்

 1. நாட்டு மர வகைகள்காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாக திகழ்வதால் அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கம் த்தின் முக்கிய குறிக்கோளாகும்.
 2. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்நாக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
 3. இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் திட்டம் உதவும்.

மாநில பசுமை குழு மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள்

 1. குழுக்கள் நடவு மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
 2. மாவட்டம் பசுமை குழு அதிகாரம் கொண்டதாக விளங்கும்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் : பயன்கள்

 1. தமிழ்நாட்டில் ராம் சார் தளங்கள்
  • ஈரநிலம் மேம்பாட்டு திட்டத்தில்  பாதுகாக்கப்பட்ட 13 தளங்கள் சர்வதேச அமைப்பின் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன.
  • இதன் மூலம் இந்தியாவில் உள்ள 75 தளங்களில் 14 தமிழ்நாட்டில் அமைந்து முதலிடம் பிடித்துள்ளது.
 2. 10 ஆண்டுகளில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக  உயர்த்தப்படும்.
 3. சிறுவன மகசூல் மூலம் விவசாயிகள், பஞ்சாயத்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யும்.
 4. கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக்  கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு  சேவைகளை வனங்கள் வழங்குவதால்

தமிழ்நாடு வனக்கொள்கை 2018

நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்களாவன:

 1. வளத்தைப் பாதுகாத்தல்.
  பல்வகை உயிரின தாவரத்தொகுதி மற்றும் அவற்றின் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்
 2. சீரமைத்தல்
  வளங்குறைந்த வனப்பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து சீரமைத்தல்.
 3. கடலோரப்பகுதிகள்.
  கடலோரப்பகுதிகளின் உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.
 4. வனத்தின் அதிகரிப்பு
  வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணிப்பது மாற்றி அமைப்பது.
 5. நீர் வளம் பெருக்குதல்.
  வனப்பாதுகாப்பு மற்றும் நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர் வளத்தைப் பெருக்குதல்.
 6. வனவிலங்கு மேலாண்மையைப் பாதுகாத்துப் பேணுவதற்கு.
 7. அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு.
 8. வன மேலாண்மைக்கான மனித வளத்தை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல்

மேலும் படிக்க : click here

நன்றி : https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr240922_1665.pdf & https://www.forests.tn.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023