புதுமைப் பெண் திட்டம், பெண்களின் கல்வி வளர்ச்சி திட்டம்| Pudhumai Penn Scheme

புதுமைப் பெண் திட்டம் pudhumai penn scheme

புதுமைப் பெண் திட்டம், பெண்களின் கல்வி வளர்ச்சி திட்டம் | Pudhumai Penn Scheme

தொடக்கம் –  

தமிழக முதலமைச்சர் அவர்களால்  05.09.2002 ல் தொடங்கப்பட்டது

நோக்கம்

  1. அரசு பள்ளிகளின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விப்ப யிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000/- வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  2. திருமணத் தகுதி வருவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்கு கல்வி தகுதியை வழங்குவது.
  3. பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  4. ஏழை குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  5. உயர்நிலை கல்வியில் சேர்க்கையை அதிகரிப்பது.
  6. பெண்களின் அதிக அளவில் கல்வி தகுதி அடைய வித்திடக்கூடிய திட்டமாகும்.

புதுமைப் பெண் திட்டம்

            பெண் கல்வி போற்றும் விதமாகவும் உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல், வல்லுனர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளர் ஆகவும் படைப்பியல் படைப்பியலாகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் உருவாகும் திட்டமாகும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  1. பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  2. குழந்தை திருமணத்தை தவிர்த்தல்.
  3. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்புப் படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  4. பெண் குழந்தைகளின் இடைநிற்றல் வீதத்தை குறைத்தால்.
  5. பெண் குழந்தைகளின் விருப்பத்தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்.
  6. உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க செய்தல்.
  7. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
  8. பெண்களின் சமூகத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்தல்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்

  1. மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலேயே உள்ள உயர் கல்வி பெறவேண்டும்.
  2. தனியார் பள்ளிகளில் RTE உதவி மூலம் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படித்து பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் தகுதி உடையவர்கள்.
  3. உயர்கல்வி என்பது முறையான கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  4. தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி கல்விக்கு பொருந்தாது.

பிற தகவல்கள்

துறையின் பெயர் மாற்றம்

தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றம் செய்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

  1. மாணவிகள் இளநிலை படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
  2. திட்டத்தின் தகவலைப் பெற இலவச அழைப்பு எண் அல்லது உதவி எண் 14417க்கு அழைக்கலாம்
  3. சென்னையில் 2500 மாணவிகளுக்கு
    1. வேலை வாய்ப்பு வழிகாட்டிப் புத்தகம்,
    1. நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப்பெண்” பெட்டகப்பை,
    1. வாங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை முதல்கட்டமாக தமிழக முதலமைச்சர் மற்றும் டில்லி முதலமைச்சர் ஆகியோர்  வழங்கினார்.

இதனுடன் தொடர்புடையது : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்

மேலும் படிக்க…Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023