தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 | Tamilnadu State Womens Policy 2024

மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 -ஐ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (21.02.2024) வெளியிட்டுள்ளார்.

Source : Press Release

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024

மாநில மகளிர் கொள்கை 2024
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

நோக்கம்

  1. பாலின வேறுபாட்டைனை களைந்திடவும்
  2. பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும்
  3. பெண்களின் நிலையினை மேம்படுத்தவும்
  4. சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

காலம்

  1. 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.
  2. மேலும், இக்கொள்கை ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

TN மாநில மகளிர் கொள்கை 2024 –

முக்கிய சிறப்பம்சங்கள்

  1. பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும்
  2. பெண்குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.
  3. வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
  4. வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
  5. அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.
  6. பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
  7. பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
  8. தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
  9. நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
  10. மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.

செயல்படுத்துதல்

  1. செயல்படுத்துதல் மற்றும் கண்கணிப்பு அலகு
    • சமூக நலத்துறை இயக்குநரக அலுவலகத்தில் செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு அலகு அமைக்கப்படும்.
  2. பெண்கள் உரிமைக்குழு
    • தலைமை : தலைமைச் செயலாளர், அவர்களின் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக்குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும்.
  3. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு
    • தலைமை : மாவட்ட ஆட்சியர்
    • இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளப்படும் சவால்களை சரிசெய்ய வேண்டும்.

இக்கொள்கையின் நன்மைகள்

  1. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன்,
  2. கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன்,
  3. மகளிர் சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும்,
    4.பாதுகாப்பான, ஆரோக்கியமான இலட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாகவும் இருக்கும்

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *