மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: குஜராத்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை!
மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: குஜராத்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை!
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI-Central Marine Fisheries Research Institute) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- புதிய சாதனை: குஜராத் கடல் மீன் உற்பத்தியில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்ததை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிலேயே கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- உற்பத்தி அளவு: 2025-ல் கடல் மீன் உற்பத்தி 6.85 லட்சம் டன்களாக உற்பத்தி தமிழ்நாடு சாதனைப்படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1% கூடுதல் வளர்ச்சியாகும்.
- குஜராத்தின் பின்னடைவு : மோசமான வானிலை காரணமாக குஜராத்தின் உற்பத்தி 15% சரிந்து 6.43 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது தமிழ்நாடு முதலிடத்திற்கு வருவதற்க்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள்
இந்தியாவின் மொத்த உற்பத்தி : 2025-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் மீன் உற்பத்தி 35.7 லட்சம் டன்கள் ஆகும். 2024-ம் ஆண்டு பிடிபட்டதைவிட மீன்கள் உற்பத்தி 3 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகம் பிடிபட்ட மீன் வகைகள்:
- கானாங்கெளுத்தி: 2.70 லட்சம் டன்களுடன் முதலிடம்.
- தலைக்காலிகள் (Cephalopods): 2.57 லட்சம் டன்களுடன் இரண்டாமிடம்.
- எண்ணெய் மத்தி மீன்: 2.53 லட்சம் டன்களுடன் மூன்றாமிடம்.
கடல் மீன் உற்பத்தி 2025: தமிழகம் முதன்மை மாநிலமானது!

தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியின் முக்கிய அம்சங்கள்
மாவட்டங்களின் பங்களிப்பு:
- கன்னியாகுமரி: 23% பங்களிப்புடன் தமிழகத்தில் முதலிடம்.
- தூத்துக்குடி: 16%.
- புதுக்கோட்டை: 14%.
- சென்னை: 12%.
தமிழகத்தில் அதிகம் பிடிபட்ட மீன் வகை: சின்ன மத்தி மீன்கள் (70.39 ஆயிரம் டன்) முதலிடத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து கணவாய் மற்றும் அயலை மீன்கள் உள்ளன.
மீன்பிடி காலங்கள்: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 34% மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கோடைக் காலத்தில் (ஏப்ரல் – ஜூன்) மிகக்குறைவாக 15% மட்டுமே கிடைத்துள்ளன.
பொருளாதார மதிப்பு:
- மீன்பிடித் தொழிலின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.69,254 கோடி (10.45 சதவீத வளர்ச்சி).
- சந்தையில் மீன்களின் சில்லரை விற்பனை மதிப்பு ரூ.97,702 கோடியாக அதிகரித்துள்ளது.
தேர்வுகளுக்கான சில மாதிரி வினாக்கள் (MCQs) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கேள்வி 1 : மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-CMFRI) 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கடல் மீன் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
அ) குஜராத் ஆ) கேரளம் இ) தமிழ்நாடு ஈ) ஆந்திரப் பிரதேசம்
பதில்: இ) தமிழ்நாடு
கேள்வி 2 : 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
- இந்தியாவின் மொத்த கடல் மீன் உற்பத்தி 3.57 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது முந்தைய ஆண்டை விட 3 சதவீத வளர்ச்சியாகும்.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
பதில்: இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி
கேள்வி 3 : தேசிய அளவில் 2025-ஆம் ஆண்டில் அதிகப்படியாகப் பிடிக்கப்பட்ட மீன் வகை எது?
அ) எண்ணெய் மத்தி ஆ) இந்திய அயலை (Mackerel) இ) கணவாய் மீன்கள் (Cephalopods) ஈ) வாளை மீன்
பதில்: ஆ) இந்திய அயலை (Mackerel)
கேள்வி 4 : தமிழ்நாட்டின் கடல் மீன் உற்பத்தி குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
- தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தூத்துக்குடி மாவட்டம் 23 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
- தமிழக கடற்கரையில் கடந்த ஆண்டில் அதிகம் பிடிபட்ட மீன் வகையாக ‘சின்ன மத்தி’ உள்ளது.
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
பதில்: ஆ) 2 மட்டும் சரி (குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம் தான் 23 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது)
கேள்வி 5 : இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் எந்த வகை படகுகளின் பங்களிப்பு மிக அதிகமாக (81.7%) உள்ளது?
அ) பாரம்பரியப் படகுகள் ஆ) மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் இ) விசைப்படகுகள் (Mechanized boats) ஈ) கட்டுமரங்கள்
பதில்: இ) விசைப்படகுகள் (Mechanized boats)

