World Hand Hygiene Day 2026: Action saves lives!
World Hand Hygiene Day 5 May 2026| உலக கை சுகாதார தினம், 5 மே 2026
நோக்கம்
- மே 5 ஆம் தேதி, உலக கை சுகாதார தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
- இது ஒரு உலகளாவிய கை சுகாதாரத் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் சுகாதார நிகழ்வாகும்.
- சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்காக, உலக மக்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
Read About – International Labour Day 2026
உலக சுகாதார அமைப்பு (WHO)
கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு (WHO), நீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பிரச்சாரங்களுடன் கூடுதலாக, கைச் சுகாதாரதின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதில் தனது கவனத்தை அதிகரித்துள்ளது.
உலக கை சுகாதார தினம் 2026 கருப்பொருள்
- உலகக் கை சுகாதார தினத்தின் 2026-ம் ஆண்டிற்க்கான, கருப்பொருள் “செயல் உயிர்களைக் காப்பாற்றும்” என்பதாகும்.
- இது “ உயிர்களைக் காப்பாற்றுங்கள்: உங்கள் கைகளைச் சுத்தம் செய்யுங்கள் ” என்ற பிரச்சாரத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.
- கருப்பொருள் மீதான விளக்கம்
- நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கவும், சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளிலும் பரந்த சமூகத்திலும் கை சுகாதார விழிப்புணர்வை உறுதியான செயலாக மாற்றுவதன் அவசரத் தேவையை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
உலக கை சுகாதார தினத்தின் வரலாற்றுப்பின்னணி
- 2009-ஆம் ஆண்டு முதல், உலக சுகாதார அமைப்பு (WHO), “உயிர்களைக் காப்பாற்றுங்கள்: உங்கள் கைகளைச் சுத்தம் செய்யுங்கள்” என்ற வருடாந்திர உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
- இது அன்று முதல் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Read About – World Earth Day 2026: உலக பூமி தினம் 2026

