CM’s Breakfast Scheme in Tamil Nadu | முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

CM’s Breakfast Scheme in Tamil Nadu | முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

தொடக்கம்:

  1. 15.09.2022 அன்று
  2. மதுரை மாநகரில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்” தொடங்கப்பட்டது.

நோக்கம்:

அரசு பள்ளிகளில் 01 முதல் 05ம் வகுப்பு வரை பயிலும் மாணக்கர்களுக்குக் காலை நேர உணவு வழங்கும் திட்டமாகும்.

திட்டத்தின் முக்கிய குறிக்கோள்:

  1. ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்தல்.
  2. ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல்.
  3. பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்.
  4. வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைத்தல்.

இத்திட்டத்தின் நன்மைகள்:

  1. மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்.
  2. மாணவர் வருகை அதிகரிக்கும்.
  3. பள்ளி இடைநின்றல் தவிற்க்கப்படும்.
  4. மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

உணவுப் பட்டியல்:

  1. திங்கட்கிழமை – ரவா உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார்.
  2. செவ்வாய்க்கிழமை – சேமியா காய்கறி கிச்சடி.
  3. புதன்கிழமை – வெண் பொங்களுடன் காய்கறிச் சாம்பார்.
  4. வியாழக்கிழமை – அரிசி உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார்.
  5. வெள்ளிக்கிழமை – ரவா கேசரியுடன் சேமியா காய்கறிச் கிச்சடி

கண்காணிப்புக் குழு:

  1. மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கப்படும்.

கண்காணிப்பில் ஈடுபடும் துறைகள்:

  1. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை
  2. நகராட்சி நிர்வாகத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
  3. பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கப்படும்.

சமீபத்திய மாணவர்களுக்கான தமிழக அரசின் பிற திட்டங்கள்

  1. இல்லம் தேடி கல்வி
  2. கல்வி புதுமைப்பெண் திட்டம்
  3. நான் முதல்வன் திட்டம்

Source & Thanks to : Tamilarasu

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *