Postal Ballot System | தபால் வாக்கு சீட்டு முறை
Postal Ballot System | தபால் வாக்கு சீட்டு முறை
Postal Ballot System | தபால் வாக்கு சீட்டு முறை என்றால் என்ன?
இந்தியாவில் தபால் வாக்குச் சீட்டு முறை (Postal Ballot) என்பது,
- வாக்குச் சாவடிக்கு நேரில் செல்ல முடியாத தகுதியுள்ள வாக்காளர்கள், தபால் மூலமாகவோ அல்லது மின்னணு வழியாகவோ (ETPBS) வாக்களிக்கும் வசதியாகும்.
- இது 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் (PwD), அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் அரசு அலுவலர்கள் மற்றும் சேவைப்பணியில் இருக்கும் வாக்காளர்களுக்கு (ராணுவம்) வழங்கப்படுகிறது.
தபால் வாக்கு முறை – முக்கிய அம்சங்கள்:
- தகுதியுடையவர்கள் (Absentee Voters): 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் (PwD), மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள், முப்படை வீரர்கள்.
- விண்ணப்பிக்கும் முறை (Form 12D): தபால் வாக்கு கோரி, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் (Returning Officer – RO) படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- மின்னணு வழி தபால் வாக்கு (ETPBS): சேவை வாக்காளர்களுக்கு, தபால் வாக்குச்சீட்டு மின்னணு முறையில் அனுப்பப்பட்டு, அவர்கள் வாக்களித்து தபால் மூலம் திரும்ப அனுப்புவார்கள்.
- சரிபார்ப்பு (Declaration): வாக்குச் சீட்டுடன், தகுதியுள்ள ஒரு அதிகாரியிடம் (Gazetted Officer) அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் சான்றொப்பம் (Attestation) பெறப்பட்ட அறிவிப்புப் படிவத்தையும் இணைக்க வேண்டும்.
- சமர்ப்பித்தல்: பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச் சீட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் தேர்தல் அதிகாரியைச் சென்றடைய வேண்டும்.
மேற்கூறிய வாக்காளர் பிரிவினருக்கான விதிவிலக்கு, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 60 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951
இந்தச் சட்டம் இந்தியாவில் தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. இது பின்வரும் விடயங்களைக் கையாள்கிறது:
- நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் தகுதி மற்றும் தகுதியின்மை போன்ற விவரங்கள்,
- தேர்தல்களை நடத்துவதற்கான நிர்வாக அமைப்பு,
- அரசியல் கட்சிகளின் பதிவு,
- தேர்தல்களை நடத்துதல்,
- தேர்தல் தகராறுகள்,
- ஊழல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் குற்றங்கள், & இடைத்தேர்தல்கள்.
தபால் வாக்குச்சீட்டு முறையில் திருத்தங்கள்
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தபால் வாக்கு முறையைத் தேர்வுசெய்யும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை சட்ட அமைச்சகம் குறைத்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
- தற்போது, 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அல்லது கோவிட்-19 தொற்று சந்தேக நபர் தபால் வாக்கு முறையைத் தேர்வு செய்யலாம்.
- முன்னதாக, 2019-ஆம் ஆண்டில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு முறையைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் வகையில் , சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தியிருந்தது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் முதல் மாநிலம் பீகார் என்பதால், திருத்தப்பட்ட விதிகளால் பீகார் வாக்காளர்களே முதலில் பயனடைவார்கள்.
பிரச்சினைகள் மற்றும் சவால்கள்
- தபால் தாமதங்கள் – வாக்குச்சீட்டுகள் தாமதமாக வந்து சேரலாம்.
- பாதுகாப்பு தொடர்பான கவலைகள் – முறையற்ற செல்வாக்கு அல்லது தவறான உதவியின் அபாயம்.
- மோசடி நடப்பதற்கான சாத்தியம் – அடையாளச் சரிபார்ப்புச் சவால்கள்.
- நிர்வாகப் பணிச்சுமை – கூடுதல் பணியாளர்கள், சரிபார்ப்பு செயல்முறைகள்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் விலக்கப்பட்டுள்ளனர் – பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

